டிடிவி தினகரன் விமர்சனம் குறித்து கார்த்தி சிதம்பரம் பதிலடி

டிடிவி தினகரன் விமர்சனம் குறித்து கார்த்தி சிதம்பரம் பதிலடி

கார்த்திக் சிதம்பரம்

எடப்பாடி பழனிச்சாமி குறித்து டிடிவி தினகரன் விமர்சனம் செய்த நிலையில் அதற்கு கார்த்தி சிதம்பரம் எம்பி பதிலடி கொடுத்துள்ளார்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், கீழடி அகழ்வாய்வு பணியினை மத்திய அரசு மேற்கொள்ளும் போது அதனை இருட்டிப்பு செய்தனர். தமிழக அரசு கீழடி அகழ்வாய்வு பணியினை மேற்கொள்வதே சிறந்தது. கீழடி அகழாய்வு பணியினை தமிழக அரசு மேற்கொள்வதால் உலக அங்கீகாரம் கிடைக்காது என்பது தவறு, இதன் அறிக்கைகளை 26 மொழிகளில் வெளியிடுகின்றனர் என்றார், மேலும் தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து கீழடி அகழ்வாய்வு பணிகள் தாமதமாக துவங்கியதாகவும் தெரிவித்தவர், திமுகவின் B team மாக அதிமுக செயல்படுவதாக ttv தினகரனின் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, மைதானத்தில் விளையாட வந்துவிட்டு விளையாடாவிட்டால் இது போன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

Tags

Next Story