கார்த்திகை தீபம் வீட்டில் ஏற்ற சரியான நேரம்

கார்த்திகை தீபம் வீட்டில் ஏற்ற சரியான நேரம்

கோப்பு படம்


திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: கார்த்திகை மாதம் தொடங்கிய முதல் நாளில் இந்தாண்டு கார்த்திகை தீபத்திருநாள் கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

திருக்கார்த்திகையில் தீபமேற்றுவது ஏன்? - அண்ணாமலையார் தீபம், பரணி தீபம் என்றால் என்ன? 17 நவம்பர் 2023: கார்த்திகை 1 வெள்ளிக்கிழமைதிருவண்ணாமலையி கொடியேற்றம் நடைபெற்றது. 20 நவம்பர் 2023: (கார்த்திகை 4 திங்கள்) வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி காமதேனு வாகனத்தில் ஈசன் வலம்வருதல். 21 நவம்பர் 2023: (கார்த்திகை 5 செவ்வாய்) வெள்ளி ரிஷப வாகனம் 22 நவம்பர் 2023: (கார்த்திகை 6 புதன்) வெள்ளி ரதம் 23 நவம்பர் 2023: (கார்த்திகை 7 வியாழன்) பஞ்சமூர்த்திகள் மகா ரதம். காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் வடம் பிடித்தல் 26 நவம்பர் 2023:

(கார்த்திகை 10 ஞாயிறு) பரணி தீபம் காலை 4 மணிக்கு மாலை 6 மணிக்கு மகா தீபம் கார்த்திகை தீபம் ஏற்றுவதன் ஆன்மிக, அறிவியல் காரணம் என்ன? பழைய அகழ் விளக்குகளை ஏற்றலாமா? வீட்டில் தீபம் ஏற்ற சரியான நேரம் : கார்த்திகை தீபம் நம் வீடுகளிலும் ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். அவசியமும் கூட. நாம் அன்றைய தினத்தில் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு. வீடுகளில் தீபங்கள் ஏற்ற தயாராக இருக்க வேண்டும். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படக்கூடிய மாலை 6 மணிக்கு நாமும் நம் வீட்டில் வாசல் மற்றும் பிற இடங்களில் வைக்கக்கூடிய தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சரியான நேரமாக இருக்கும். திருவண்ணாமலை கோயில் சிறப்பம்சம் :

கார்த்திகை தீபம் கோலாகலமாக கொண்டாட காரணம் என்ன? தேரோட்டம் : 10 நாட்கள் நடக்கக்கூடிய இந்த கார்த்திகை தீபத் திருவிழாவில் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் சுவாமி திருவீதி உலா நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வான நவ 22ம் தேதியில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா வருவார்கள். தொடர்ந்து நவம்பர் 23ம் தேதி வியாழக்கிழமை காலையில் மகா தேரோட்டம் நடைபெறும். இதில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல நவ 26ம் தேதி நடக்க உள்ள பரணி தீப நிகழ்வின் போதும், மாலை நேரத்தில் நடக்கும் மகா தீபம் ஏற்றும் நிகழ்வின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அரோகரா என்ற கோஷத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கலைக்கட்டும்.

Tags

Next Story