கொளத்தூர் இரட்டை சிவாலயத்தில் கார்த்திகை சோமவார விழா

சோமவார பூஜை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரட்டை சிவாலயத்தில் கார்த்திகை கடைசி சோமவார விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிவனுக்கு சோமசுந்தரன் என்று ஒரு திருநாமம் உள்ளது. சோமன் என்பது சந்திரனைக் குறிக்கும் ஒவ்வொரு சோமவாரமும் திங்கட்கிழமை சிவனுக்கு விசேஷமான நாள். எனினும் கார்த்திகை மாத சோமவாரம்வெகு சிறப்பு. அதுவும். 4வது சோமவர்ரம் அற்புத பலன்களைத் தர கூடியது ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைபிடித்து, விமோசனம் பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவருடைய மனைவி ரோகிணி அவகுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைபிடித்தார். அன்று முதல் பெண்கள் சவுபாக்கியத்துடன் திகழவும். கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும். இந்த விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். அப்போது, சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்கு திருமுழுக்காட்டுகின்றனர் .
கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வையவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் சந்திரசேகர மூர்த்திக்கு வெண் மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தி அடைவதுடன் மன அமைதி கிட்டும். வம்சம் தழைக்கும் என்பது ஐதீகம். இதன்படி கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர் மற்றும் காசி விஸ்வநாதர் இரட்டை சிவாலயத்தில் கார்த்திகை கடைசி சோமவார விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவை யொட்டி, கோயில் உள்வளாகத்தில் யாகசாலை அமைக்கப் பட்டு இரட்டை சிவாலயங்களுக்கு தனித்தனியாக 108 சங்குகளில் புனிதநீர் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் இரு மூலவர்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு அபிஷேக மும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதான மும் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சிவ கே.என்.சரவணன் தலைமையில் சிவனடியார் கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
