கார்த்திகை 1: மேலமாசி வீதி ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை

கார்த்திகை 1: மேலமாசி வீதி ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை

மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் 

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கார்த்திகை ஒன்றாம் நாளான இன்று முதல் பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து இன்று முறைப்படி விரதத்தை தொடங்கினர். ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதம் இருந்து இருமுடி ஏந்தி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி கார்த்திகைமாத முதல் நாளான இன்று அதிகாலையிலேயே மாலை அணிந்து கொள்ள திரளான ஐயப்ப பக்தர்கள் மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோவிலுக்கு வந்தனர், நீண்ட வரிசையில் நின்று ஆனந்த ஐயப்பனை தரிசனம் செய்தனர்.இன்று கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் ஆனந்த் ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் துவங்கின. தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். அதேபோல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கள்ளழகர் பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.

Tags

Next Story