கார்த்திகை தீப விழா - டி.ஐ.ஜி , மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கார்த்திகை தீப விழா -  டி.ஐ.ஜி , மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்-2023 திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு செங்கம் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசுலேசுவரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சியாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வெளி நாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தர உள்ளார்கள். எனவே, பக்தர் மற்றும் பொது மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், நகராட்சி நிர்வாக துறை மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் ஆகிய துறைகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தற்காலிக பேருந்து நிறுத்தங்களில், மின்சார வசதி, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து இந்த ஆய்வில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், தற்காலிக பேருந்து நிலையத்தில் வார இறுதிக்குள் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவு பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் திண்டிவனம் சாலை (தற்காலிக பேருந்து நிறுத்தம்), அவூலூர்பேட்டை ரோடு, காஞ்சி ரோடு, வேட்டவலம் ரோடு, அத்தியந்தல், வேலூர் ரோடு, அவூலூர்பேட்டை திருக்கோவிலூர் ரோடு, மணலூர்பேட்டை ரோடு, தண்டராம்பட்டு ரோடு உள்ளிட்ட அனைத்து தற்காலிக பேருந்து நிறுத்த இடங்களை இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வில், மாவட்ட காவல் கண்கானிப்பாளர் கார்த்திகேயன் திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி, நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி, மேலாண்மை இயக்குநர் (விழுப்புரம்) எஸ்.எஸ்.ராஜ்மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story