கார்த்திகை மகா தீபம்: 4,500 கிலோ நெய் ஆவினில் கொள்முதல்

கார்த்திகை மகா தீபம்: 4,500 கிலோ நெய் ஆவினில் கொள்முதல்

கொள்முதல் செய்யப்பட்ட நெய்


திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திடம் இருந்து 4,500 கிலோ முதல்தர அக்மார்க் நெய், ரூ.34 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திடம் இருந்து 4,500 கிலோ முதல்தர அக்மார்க் நெய், ரூ.34 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,15 கிலோ எடையுள்ள 300 டின்களில் வழங்கப்பட்டுள்ள முதல் தர அக்மார்க் முத்திரை பதித்த ஆவின் நெய், அருணாசலேஸ்வரர் கோவில் மடப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கொப்பரை, கடந்த 2021-ம் ஆண்டு பக்தர் ஒருவரால் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. அந்த கொப்பரை தொடர்ந்து இந்த ஆண்டும் பயன் படுத்தப்படுகிறது. அதோடு, பக்தர்கள் நெய் காணிக்கையை ரொக்கமாக செலுத்தவும், நெய்யாக நேரில் செலுத்தவும் சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருக்கிறது.

அதன்படி, ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தலாம்.அதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் யானை மண்டபம் எதிரில் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இங்கு, நெய் குட காணிக்கைக்கான தொகையை ரொக்கமாக செலுத்தி, அதற்கான ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், நேரடியாக நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, கோவில் கொடி மரம் அருகிலும், ராஜகோபுரம் அடுத்த திட்டிவாசல் பகுதியிலும் விரைவில் சிறப்பு பிரிவு தொடங்கப்படும். அதே போல், மகா தீபத் திருவிழாவின் போது, பே கோபுர வீதியில் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags

Next Story