ஸ்ரீ வராகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை மாத பஞ்சமி

ஸ்ரீ வராகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை மாத பஞ்சமி
X

 ஸ்ரீ வராஹி அம்மன்

சிவகங்கை அருகே சாமியார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வராஹி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை மாத பஞ்சமி திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு புதுப்பட்டு சேலை அணிவித்து வண்ணமலர் மாலைகள் மற்றும் முத்து மாலைகள் அணிவித்து சந்தன காப்பு சாற்றி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு தீப தூப ஆராதனை காண்பித்து சிறப்பு பூஜைகளை நடத்தி கோபுர தீபம், கும்ப தீபம், நாகதீபம், ஐந்துமுக தீபம் உள்ளிட்ட பல்வேறு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. பின்னர் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விரலி மஞ்சள் அரைத்து வைத்து வழிபாடு செய்தனர்.

Tags

Next Story