கார்த்திகை 1: நெல்லையில் விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்
மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் மண்டல மற்றும் மகர பூஜைகளுக்காக நேற்றைய தினம் மாலை நடை திறக்கபட்டது.கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் மாலை அணிந்து விரதம் இருந்து பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி மண்டல மற்றும் மகர பூஜைகளுக்கு செல்வது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத பிறப்பான இன்று முதல் பக்தர்கள் விரதம் இருப்பதற்காக மாலை அணிந்து கொண்டனர் பிரசித்தி பெற்ற நெல்லை சாலை குமார சுவாமி திருக்கோவில் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஐயப்ப தேவ சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் சபரிமலை புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் விரதத்தை மேற்கொள்வதற்காக கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்று மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். முன்னதாக ஐயப்ப பக்தர்கள் தாமிரபரணி அருகில் புனித நீராடி கோவில்களில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்றனர்.
Tags
Next Story