தியாகதுருகம் மலை மீது கார்த்திகை தீபம்
மகா தீபம் ஏற்றம்
தியாகதுருகம் நகரை ஒட்டி வரலாற்று சிறப்புமிக்க மலை உள்ளது.இதன் மீது ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின் போது மகா தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. நேற்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மலை உச்சியில் மாலை 6:30 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. சுற்றுவட்டார பக்தர்கள் மலை மீது எரியும் தீபத்தை வணங்கி வழிபாடு நடத்தினர். அதேபோல் முடியனுாரில் உள்ள நுாற்றாண்டு பழமையான ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து மாலையில் கோவில் விமானத்தின் மீது மகா தீபம் ஏற்றி பூஜைகள் நடந்தது. பெண்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
Tags
Next Story