ஒரு லோடு நிவாரண பொருட்களை அனுப்பிய கருமத்தம்பட்டி போலீசார்
நிவாரண பொருட்களுடன் போலீசார்
வரலாறு காணாத அளவு தென் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.இதனை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வெள்ள பாதிப்பு காரணமாக அன்றாட தேவைகளுக்கு மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வருகின்றனர்.இந்நிலையில் கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதி மக்கள் காவல்துறையினருடன் இணைந்து மூவாயிரம் குடிநீர் பாட்டில்,இருபத்தி ஆறு பெட்டி பிஸ்கட்
பாக்கெட்,ரஸ்க்,கொசுவர்த்தி சுருள்,பால்பவுடர்,தீப்பெட்டிகள்,அரசிவேட்டி,சேலை,துண்டுகள் என ஒரு லோடு லாரி நிறைய பொருட்களை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மழை காரணமாக பாதிக்கபட்ட மக்களுக்கு இக்கட்டான நிலையில் உதவிய பொதுமக்களுக்கு கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் அன்னம் நன்றி தெரிவித்தார்.