கரும்பாலை மாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா
மதுரை 31 வது வார்டு கரும்பாலை பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை முகூர்த்தக்கால் ஊன்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து உலகம் நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் மூர்த்தி - லதா குடும்பத்தினர் சார்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து வருகிற செவ்வாய்க்கிழமை வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேத்தி கடன் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் புதன்கிழமை பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை மற்றும் இரவு முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதற்கான திருவிழா ஏற்பாடுகளை தலைவர் பாஸ்கரன் செயலாளர் பால்பாண்டி பொருளாளர் முத்துப்பாண்டி தலைமையில் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.