கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா

கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா

பஞ்சபூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பஞ்சபூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் இன்று நடைபெற்றது கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு, நாடாளுமன்ற திருச்சி தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் உழைத்துக்கொண்டு இருந்தபோது, இத்தொகுதியை தோழமைக் கட்சிக்கு கொடுப்பது என தலைமை முடிவெடுத்தது. திமுக தலைமையின் உத்தரவை ஏற்று மனம் நோகாமல், முகம் சுளிக்காமல், தொடர்ந்து கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக பாடுபட்டு சிறப்பாக செயலாற்றிய நமது கழக தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல பெரம்பலூர் தொகுதியில் நமது தோழர்கள் எதையும் எதிர்பாராமல் தொடர்ந்து அத்தொகுதியில் கடுமையாகவும், சிறப்பாகவும் பாடுபட்டீர்கள். நாங்கள் உங்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறோம். என்றைக்கும் நீங்கள் சொல்கிற பணிகளை தட்டாமல் செய்பவனாக நான் இருப்பேன். அதுபோல நமது சட்டமன்ற உறுப்பினர்களும், நமது உள்ளாட்சி பிரதிநிதிகளும் இருப்பார்கள். தலைவர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை நாம் சீரோடும் சிறப்போடும் கொண்டாட வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 402 ஊராட்சிகள் 2 ஆயிரம் கிராமங்கள் உள்ளன என இன்று காலை நமது மாவட்ட ஆட்சியர் என்னிடம் சொன்னார். அனைத்து பகுதியிலும் தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்தை வைத்து, அவருக்கு மரியாதை செலுத்து கழக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை தட்டாமல் வழங்க வேண்டும். அதேபோல மாநகரத்திலும் வட்ட செயலாளர்கள் தலைவர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். தலைவர் கலைஞர் 40 ஆண்டு காலம் செய்த பணியை, நமது தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்ற 3 ஆண்டு காலத்தில் செய்து முடித்துள்ளார்.

இந்தியாவில் அரசியல் கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணியை அமைக்கக்கூடிய வகையில் உயர்ந்துள்ளார். இக்கூட்டணியில் இருந்து நித்தீஷ் குமார், மம்தா பானர்ஜி வெளியே போனார்கள். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என உழைத்தவர்களில் முதன்மையானவர் நமது தலைவர். தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பணியும் செய்யாத பிரதமர் மோடியை இந்தியாவில் எதிர்த்து பேசிய முதல் முதலமைச்சர் நமது தலைவர். தோழமைக் கட்சிகள் மத்தியில் நமது கட்சிக்கு மரியாதை பெற்று தந்திருக்கிறார். திருச்சி பஞ்சபூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும். மிக உயரமான கருணாநிதி சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரிடம் இதுகுறித்து பரிந்துரை செய்ய இக்கூட்ட தீர்மானம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று பேசினார்.

Tags

Next Story