நாமக்கல்லில் கருணாநிதி பிறந்தநாள் விழா! ராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்பு!

நாமக்கல்லில் கருணாநிதி பிறந்தநாள் விழா! ராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்பு!

கருணாநிதி பிறந்தநாள் விழா

நாமக்கல் நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3ம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை ஓராண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின், நூற்றாண்டு விழா நிறைவு பெற்று, 101வது பிறந்த நாள் விழா நாமக்கல் நகர திமுக சார்பில், நாமக்கல் மோகனூர் ரோட்டில் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் இளங்கோவன், நகராட்சித்தலைவர் கலாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், நகராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரன், சரவணன், திமுக நிர்வாகிகள் ராஜகோபால், பிரபு, செல்வசீராளன், விஸ்வநாத், வெங்கடாசலம், பால்ரவி, கடல் அரசன் கார்த்தி உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மறைந்த முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. நாமக்கல் நகரில் உள்ள 39 வார்டுகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. திமுக கட்சிக்கொடியை ஏற்றி வைத்தபின் கலைஞர் மு.கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை சூட்டி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்.

Tags

Next Story