கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில், மாவட்ட அளவிலான கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி நடைபெற்றது.

அரசு கலைக்கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை வளாகத்தில் மாவட்ட அளவிலான கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். "சட்ட மன்ற கதாநாயகர் கலைஞர்" என்ற தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரி, மயிலம் பொறியியல் கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செஞ்சி ராஜாதே சிங்கு பாலிடெக்னிக் கல்லூரி, விழுப்புரம் இ.எஸ். பொறியியல் கல் லூரி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல் வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேசினார்கள்,

இப்போட்டியை ஒருங்கிணைப்பாளர் முனைவர் குணசேகரன் தொகுத்து வழங்கினார். இதில் கல்லூரி இணை பேராசிரியர்கள் அருள்தாஸ், அசோகன், சுசான்மேரி, நெப்போலியன், ராஜவேல், லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story