திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருவண்ணாமலை நகர திமுக சார்பில் முத்து விநாயகர் கோவில் தெருவில் கருணாநிதி நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் ஜீவரேகா விஜயராஜ், குட்டி புகழேந்தி, நகரமன்ற உறுப்பினர் ராணி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்ட பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன்,
நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, ஏ.ஏ. ஆறுமுகம், இரா.கார்த்திகேயன், சர்தார், நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணதாசன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கிரிக்கெட் ரவி, சமயராஜ், ராயல் தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வக்கீல் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.