அருணாசலேஸ்வரர் கோவிலை மீட்டு தந்தவர் கருணாநிதி: அமைச்சர் புகழாரம்
அமைச்சர் பங்கேற்ற விழா
திருவண்ணாமலை நகர தி.மு.க. சார்பில் நகராட்சி 26-வது வார்டில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத் தலைவர் சு.ராஜாங்கம், நகர நிர்வாகிகள் ந.சீனுவாசன், குட்டி புகழேந்தி, இல.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரமன்ற உறுப்பினர் க.பிரகாஷ் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-தமிழ்நாட்டின் நவீன சிற்பியான கலைஞரின் நூற்றாண்டு விழாவை திருவண்ணாமலை நகர தி.மு.க. சார்பில் சிறப்பான முறையில் கொண்டா டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த கருணாநிதி சிறப்பான ஆட்சியை தந்தார்.
அருணாசலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை காட்சி பொருளாக மாற்ற நினைத்த தொல்லியல் துறையிடம் இருந்து மீட்டுத் தந்தவர் கருணாநிதி. அதன் பலனாகத்தான் உலகம் முழுவதிலும் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் ஆன்மிக பக்தர்கள் வழிபடும் அருணா சலேஸ்வரர் கோவிலில் தங்குதடையின்றி பூஜைகள், திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை. மாவட்ட மக்கள் கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். நன்றி உணர்வு மிக்கவர்கள்.திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. திராவிட மாடல் அரசின் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்க அயராத உழைப்பினை செலுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், மாநில தொ.மு.ச. செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, விஜி என்கிற விஜயராஜ், டாக்டர் பிரவீன் ஸ்ரீதரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் எம்.ஆர்.கலைமணி, டி.எம்.கலையரசன், திவாகர், மாவட்ட கவுன்சிலர் இல.சரவணன், மண்டி ஏழுமலை, நகரமன்ற உறுப்பினர் கோபி சங்கர், லாயர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குரு டிராவல்ஸ் கண்ணன் நன்றி கூறினார்.