மேட்டூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா

மேட்டூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

மேட்டூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி 101-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேட்டூர் நகராட்சி அம்மா உணவகத்தில்,

திமுக சார்பில் பொது மக்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் காசி விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு கலைஞர் கருணாநிதியின் திரு உருவப் படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் எலிசபெத் ராணி, நகர மன்ற தலைவர் சந்திரா, கவுன்சிலர்கள் ரங்கசாமி, அனிதா ஸ்ரீதர், பாப்பாத்தி, முருகேசன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story