ஆயிரம் அரிவாள் கருப்பண்ணசாமி கோவில் விழா

X
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் விழா நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் விழா நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமியிடம், பக்தர்கள் தங்களுடைய குறைகளை தீர்க்கும்படி வேண்டி கொள்வார்கள். அந்த குறைகள் தீர்ந்ததும், கோட்டை கருப்பணசாமிக்கு அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றனர். பொதுவாக காணிக்கையாக செலுத்தப்படும் அரிவாள்கள் இரும்பு தகடுகளால் செய்யப்படுவது வழக்கம். ஆனால் ஒருசில பக்தர்கள் தங்கத்திலான அரிவாள்களையும் சாமிக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
Next Story
