கருப்பூர் பத்மவாணி மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்
கருப்பூர் கோட்டக்கவுண்டம்பட்டி பத்மவாணி மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டில் துறை சார்பில் செயற்கை நுண்ணறிவை எந்திரத்தின் மூலம் கற்றலும், சவால்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கல்லூரி இயக்குனர் இசைவாணி சத்தியமூர்த்தி, தாளாளர் கே.எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். கல்லூரி செயலாளர் கே.துரைசாமி, கல்லூரி முதல்வர் ஹரி கிருஷ்ணன்ராஜ், நிர்வாக அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துறை தலைவர் புஷ்பலதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களை உதவி பேராசிரியர் அகிலாண்டேஸ்வரி, அறிமுகப்படுத்தினார். கருத்தரங்கில் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பேராசிரியர் சசிகுமார் கணேசன், நுண்ணறிவை எந்திரத்தின் மூலம் கற்றலும், அதற்கான சவால்கள் குறித்தும் பேசினார். கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
பெங்களூருவை சேர்ந்த பேராசிரியர்கள் சங்கீதா, ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு கணினி செயல்பாடு குறித்து பயிற்சி அளித்தனர். உதவி பேராசிரியை மோகனப்பிரியா நன்றி கூறினார்.