தாய் திட்டியதால் 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை
கரூரில் பள்ளியை விட்டு கால தாமதமாக வீடு திரும்பிய மாணவி பெற்றோர் கண்டித்ததால், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை, தீனா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் - தேன்மொழி தம்பதிகள். இவர்களது மகள் பிரீத்தி(14 ) வெள்ளியணை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பிப்ரவரி 14-ஆம் தேதி பள்ளியை விட்டு காலதாமதமாக வீட்டுக்கு வந்த தனது மகளை தாய் தேன்மொழி கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த பள்ளி மாணவி பிரீத்தி, மதியம் 2 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிந்த தேன்மொழி, வெள்ளியணை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த பள்ளி மாணவியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வெள்ளியணை காவல்துறையினர் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.


