மகனை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தந்தை கைது

குழந்தை இறந்ததால் தந்தை-மகனிடையே தகராறு ஏற்பட்டதில் விபரீதம்

கரூர் அருகே பெற்ற மகனை கொலை செய்த வழக்கில் தந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர் மாவட்டம் உரம்பு பாளையம், காமராஜர் நகரை சேர்ந்தவர் சடையப்பன். இவரது மகன் தேவ பிரகாஷ்( 21 ). கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தேவபிரகாசுக்கு, காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதில் ஆண் குழந்தை இருந்தது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தது.

இது தொடர்பாக கடந்த 23ஆம் தேதி இரவு 11 மணி அளவில் சடையப்பன், காயத்ரி குறித்து தகாத வார்த்தை பேசி தகராறு செய்துள்ளார். இதனை தேவப்பிரகாஷ் தட்டி கேட்டதால், தந்தை - மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சடையப்பன் எதிர்பாராத நேரத்தில் தன் வைத்திருந்த சிறிய அளவிலான கத்தியால் தேவப்பிரகாஷ் அடிவயிற்றில் கிழித்துள்ளார்.

உடனடியாக தேவ பிரகாசை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் தேவப்பிரகாஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து, காயத்ரி அளித்த புகாரின் பேரில், சடையப்பனை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story