100 நாள் திட்ட பணியாளர்களை சந்தித்த கரூர் எம்.பி. ஜோதிமணி..!
கரூரில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களை எம்.பி.ஜோதிமணி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடவூர் தாலுக்கா கீழ பகுதி ஊராட்சியில் பணியாற்றி வந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேட்டறிந்தார். அப்போது, 100 நாள் வேலைத்திட்டத்தில் கடந்த ஆறு வாரங்களாக ஊதியம் வழங்கப்படாதது குறித்து தொழிலாளர்கள் எம்.பி. ஜோதிமணியிடம் முறையிட்டனர். அப்போது, பிரச்சனை தொடர்பாக மத்திய அரசிடம் பேசி ஊதியத் தொகையை பெற்று தருவதாக ஜோதிமணி உறுதியளித்தார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் துவக்கப்பட்ட இந்த திட்டத்தில் பணியாளர்களுக்கு, அவர்கள் வேலை செய்யும் பகுதியிலே வந்து ஊதியம் வழங்கிய காலம் போய் தற்போது ஆறு வார காலமாகியும் ஊதியம் வராதநிலை தற்போது உள்ள ஆட்சியில் நிலவி வருவதாக தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், கீழபகுதி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன், ஊராட்சி செயலர் மாரியப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ், 100 நாள் பணித்திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Next Story