காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் மது எடுப்பு விழா!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் மது எடுப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் மது எடுப்பு விழா நடைபெற்றது. இதில் 1000 கும் மேற்பட்ட பெண்கள் மது குடங்களை தலையில் சுமந்தமாறு மேள தாள இசை முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் உள்ளது இக்கோவில் திருவிழா ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 6 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மண்டக படிகாரர்கள் சார்பில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தொடர்ந்து முளைப்பாரி விழா பொங்கல் விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மது எடுப்பு விழா நடைபெற்றது.

இதில் கறம்பக்குடி, தட்டாவூரணி, தென்னகர், குளக்காரன் தெரு, அக்ரஹாரம் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது நிலங்களில் குடங்களை வைத்து அதில் நெல் தென்னம்பாளைகளை வைத்து பூ பொம்மைகளை வைத்து அலங்கரித்து தலையில் சுமந்து மேள தாள இசை முழங்க கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் உள்ள முருகன் கோவிலை சென்றடைந்தனர்.

முத்துமாரியம்மன் வேடம் , கருப்பர் வேடம் அணிந்து தீ வளையத்தினுள் நடமிட்டு காண்போரை கண்கவரச்செய்து முருகன் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று தென்னகர் பகுதியை சேர்ந்த மண்ணடியில் ஒன்றினைந்து அங்கிருந்து புறப்பட்டு காசாம்பூ நீல மேணி கருப்பர் கோவிலை சென்றடைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Next Story