காட்டு நாயக்கர் சமூகத்தினர் ஜாதி சான்றிதழ் கோரி மனு

காட்டு நாயக்கர் சமூகத்தினர் ஜாதி சான்றிதழ் கோரி மனு

மனு அளித்த மக்கள்

மதுராந்தகம் செய்யூர் வட்டத்தில் உள்ள காட்டு நாயக்கர் சமூகத்தினர் ஜாதி சான்றிதழ் கோரி மதுராந்தகம் வருவாய் தீர்வாயம் கூட்டத்தில் குடும்பத்தினர் உடன் மாவட்ட அலுவலரிடம் மனு அளித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் செய்யூர் ஆகிய இரு தாலுகாவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் காட்டு நாயக்கர்,எஸ் டி பிரிவு சான்றிதழ் கோரி பலமுறை வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர்.

ஆனால் மதுராந்தகம் செய்யூர் வட்டத்தில் மட்டும் இவர்களுக்கு எஸ்டி வகுப்பு சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் அளிக்க மறுத்து வந்த நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள மற்ற வட்டாரத்தில் எஸ்டி வகுப்பை சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

அதை காரணம் காட்டி இவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். வழக்கில் இவர்களுக்கு எஸ்டி இனத்தவர் என சாதி சான்றுதழ் அளிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்திருந்த நிலையில்,

இதுவரையும் மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டாட்சியர்கள் சாதி சான்றுதழ் இன்று வரை வழங்கவில்லை என காட்டுநாயக்கன் வகுப்பை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குழந்தைகளுடன் சென்று மதுராந்தகத்தில் நடைபெறும் வருவாய் தீர்வாயம் ஜெபாபந்தி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன் அவர்களிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story