காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
கடலூர் மாவட்டம் மிகச்சிறந்த முறையில் கல்வித்தர குறியீடுகளில் முன்னேற்றமடைந்திருக்கிறது என காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் மிகச்சிறந்த முறையில் கல்வித்தர குறியீடுகளில் முன்னேற்றமடைந்திருக்கிறது என காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கல்வித் தரக் குறியீடுகளில் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கடலூர் மாவட்டம் இருந்தது. ஆனால் புதிய அரசு பொறுப்பேற்று எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக இன்று கடலூர் மாவட்டம் மிகச்சிறந்த முறையில் கல்வித்தர குறியீடுகளில் முன்னேற்றமடைந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்திலேயே கல்வியில் மிகவும் பின்தங்கிய வட்டாரமாக இருந்த காட்டுமன்னார்கோயில் மாணவ கண்மணிகளின் சாதனைகளால் நிமிர்ந்து நிற்ப்பதை பார்க்கிறபொழுது நெஞ்சம் பூரிக்கிறது. காட்டுமன்னார்கோயில் ,முட்டம் ,ரெட்டியூர், கஞ்சங்கொல்லை , கானூர் ஆகிய அரசு பள்ளிகளிலும், மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியிலும் 100 விழுக்காடு தேர்ச்சி. மேலும் மாமங்கலம், நெடுஞ்சேரி, காட்டுமன்னார்கோயில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98% தேர்ச்சி. சத்தமின்றி சாதித்த எமது மாணவ மணிகளுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் ததும்பும் மகிழ்ச்சியையும், மனம் நிறைந்த வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்கிறேன். தேர்வில் தோல்வியடைந்தவர்கள் வாழ்வில் தோற்று விட்டதாக கருத வேண்டாம். வெற்றியின் சாவி என்பதே தோல்விக்கான காரணங்களை கண்டறியும் நுட்பம்தான். சாவியை தேடுங்கள். எல்லா கதவுகளையும் திறந்து விடலாம் என காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story