விழுப்புரத்தில் காட்டுநாயக்கன் பழங்குடியினர் ஆலோசனை கூட்டம் !!
ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் காட்டுநாயக்கன் பழங்குடியினர் பன்றி வளர்ப்பு தொழில்புரிவோர் நலச்சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன், ஆலோசகர் தனசேகரன், செயற் குழு துணைத்தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.சி., எஸ்.டி. பெடரேஷன் மாவட்ட தலைவர் நாகராஜன், மதுரைவீரன் கோவில் அறங்காவலர் வாசுதேவன், எஸ்.சி., எஸ்.டி. பெடரேஷன் மாவட்ட செயலாளர் வேலா யுதம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில், காட்டுநாயக்கன் பழங்குடியினர் பன்றி வளர்ப்பு தொழில்புரிவோர்களின் வாழ்வா தாரத்தை கருத்தில்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, நாட்டுப்பன்றி வளர்ப்பு தொழிலுக்கு உரிய பாதுகாப்பு, இடவசதியை ஏற்படுத்தித்தர வேண்டும், நாட்டுப்பன்றி வளர்ப்பு முறைகளை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முறையான ஆலோசனைக் குழு அமைத்து ஊக்குவிக்க வேண்டும், கடந்த 31.8.2001-ல் விழுப்புரம் மரபுசாரா தொழிலாளர் கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப் பட்டதை செயல்படுத்தாமல் முடக்கி வைத்துள்ளதை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அச்சங்கத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் சக்கரவர்த்தி, ராஜா, பெரு மாள், பரமசிவம், ரவிச்சந்திரன், ஆறுமுகம், ரஞ்சித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.