திருச்செந்தூர் மாசி திருவிழாவிற்கு காவடி ஊர்வலம்

X
திருச்செந்தூர் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு சென்றனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா நேற்று 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசி திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று குமரியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் புறப்பட்டனர். புஷ்பகாவடி, பன்னீர்காவடி, எண்ணெய் காவடி, வேல்காவடி, பறக்கும்காவடி என விதவிதமான காவடிகளுடன் பாதயாத்திரை ஊர்வலம் தொடங்கியது. குறிப்பாக குமரி மாவட்டம் இரணியல் சுற்றுவட்டாரப் பகுதிகள் மார்த்தாண்டம், ராஜாக்கமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 40க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து நேற்று காலை காவடி ஊர்வலம் துவங்கி, மாலையில் திருச்செந்தூர் நோக்கி செல்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல், திங்கள் நகர், கருங்கல், புதுக்கடை, தோட்டியோடு போன்ற பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. இந்த காவடிகள் அனைத்தும் வழக்கமாக நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பு வழி செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஒழுகினசேரி சந்திப்பு இரட்டை இரயில் பாதை பணிக்காக சாலை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் காவடிகள் இறைச்சகுளம், செண்பகராமன் புதூர், ஆரல்வாய்மொழி வழியாக செல்ல உள்ள உள்ளது.
Next Story
