காவேரிராஜபுரம் ஏரி... சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

காவேரிராஜபுரம் ஏரி... சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

காவேரிராஜபுரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காவேரிராஜபுரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், முழுவதும் தொடர் கனமழை காரணமாக மழை நீர் தேங்கி வண்ணம் உள்ளது சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கிய வண்ணம் காணப்பட்டு வருகிறது தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கின்றன தொடர்ந்து அனைத்து ஏரிகளும் முழுவதுமாக கொள்ளளவு நிரம்பி காணப்பட்டு வருகிறது.

நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து கொண்டிருப்பதால் ஆங்காங்கே உள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரத்தில் உள்ள ஏரி முழு கொள்ளளவு நிறைந்து கடைவாசல் வழியாக சாலையில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்காக சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியே வராமல் நிலை உள்ளது .

குறிப்பாக காவேரிராஜபுரம் இருந்து ரங்காபுரம், திருவாலங்காடு மற்றும் கனகம்மாசத்திரம் செல்வதற்கும் வழியில்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.. உடனடியாக அரசு அதிகாரிகள் கிராமத்தை வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்களின் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலைமை நீடித்தால் கிராமங்களுக்குள் மழை நீர் புகுந்து விடும் என்று அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story