கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கவிஞா் கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அவரது 98-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கண்ணதாசன் இலக்கியப் பேரவை சாா்பில் அதன் தலைவா் பழனியப்பன் தலைமையில் கண்ணதாசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதே போன்று பாரதி இலக்கிய கழகம் சார்பிலும் கவிஞர் ஜெயச்சந்திரன் தலைமையில், பல கவிஞர்கள் கண்ணதாசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக கவியரசு கண்ணதாசனின் இஷ்ட தெய்வமான மலையரசி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்று, கண்ணதாசனுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள கண்ணதாசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அக்கிராமத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு கண்ணதாசன் இலக்கியப் பேரவை சாா்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story