காயல்பட்டினத்தில் 103 மில்லி மீட்டர் மழை பதிவு

கனமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பரவலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இன்று காலை ஆறு மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 103 மில்லி மீட்டர் மழையும், திருச்செந்தூரில் 88 மில்லி மீட்டர் மழையும், கழுகுமலையில் 87 மில்லி மீட்டர் மழையும், விளாத்திகுளத்தில் 83 மில்லிமீட்டர் மழையும், கோவில்பட்டியில் 53 மில்லி மீட்டர் மழையும் ,தூத்துக்குடியில் 30 மில்லிமீட்டர் மழையும், சராசரியாக மாவட்டம் முழுவதும் 44 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
வானிலை மையம் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மற்றும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பழைய மாநகராட்சி அலுவலகம் தமிழ்சாலை ரயில் நிலையம் செல்லும் பாதை பிரேயன்ட்நகர் சிதம்பர நகர் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
