தாளடி நெற்பயிரை காத்த தமிழக முதல்வருக்கு நன்றி -கீழ்வேளூரில் தீர்மானம்

தாளடி நெற்பயிரை காத்த தமிழக முதல்வருக்கு நன்றி -கீழ்வேளூரில் தீர்மானம்

ஒன்றிய குழு கூட்டம் 

கீழ்வேளூர் ஒன்றிய குழு கூட்டத்தில் 2.டி.எம்.சி தண்ணீர் திறந்து தாளடி  நெல் பயிரை காப்பாற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் புருஷேத்த மதாஸ் ஆனையர்கள் ரேவதி, செபஸ்டியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கண்ணன், ரெங்கா, இல்முனிசா, ரேவதி, கருணாநிதி அதிமுக உறுப்பினர்கள் பாலையா, தேன்மொழி, பிரவினா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடைபெற்ற விவாதம். திமுக உறுபினர் கண்ணன் பேசுகையில் அத்திப்புலியூர் சத்துணவு கூடத்திற்கு வாங்கப்பட்ட எலக்ராணீக் தராசு பொது நிதியில் இருந்து தொகை விடுவிக் கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் பில் பே டப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது தேவூர் ஊராட்சி இரட்டை மததடியில் 200 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த இஸ்லாமியர்கள் மயாத்தான் கொள்ளைக்கு செல்ல சாலை அமைத்து தர வேண்டும். தேவூர் பிடாரி கோயில் அருகே கூரை வீடுகளின் மேல் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதை சரி செய்ய வேண்டும் என்றார்.

ஒன்றுய குழு துணைத்தலைவர் புருஷோத்தம தாஸ் பேசுகையில், டெல்டா மாவட்டத்தில் காலதாமதமாக பயிரிடப்பட்ட தாளடி நெற்பயிர்கள் காப்பாற்ற மேட்டூர் அணை வரலாற்றிலேயே பிப்ரவரி மாதத்தில் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டு தாளடி நெற்பயிர்களை காப்பாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கெரள்வதோடு இதை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் மக்களவைத் தேர்தலுக்கு முன் பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு உடன் பில் வழங்க வேண்டும் என்றார்.

திமுக உறுப்பினர் ரெங்கா பேசுகையில் பாசன வாய்தால்கள் தூர் வாரும் போது A சேனல் வாய்கால்கள் தூர்வாரப்படுகிறது. B, மற்றும் C சேனல் வாய்கால் தூர்வாருவது இல்லை வடக்காலத்தூர், ராதாமங்கலம். இருக்கை வண்டலூர் ஆகிய ஊராட்சியில் உள்ள வாய்க்கால்களை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் பாசன வாய்கால்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திமுக உறுப்பினர் கருணாநிதி : பேசுகையில் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழப் புறத்தில் செயல்பட்டு வரும் மீன் எண்ணை தயார் செய்யும் ஆலையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் கீழ்வேளூர் ஒன்றியம ஒக்கூர், வெங்கிடங்கால் ஊராசியில் உள்ளர மக்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும் என்றார்.

அதிமுக உறுப்பினர் தேன்மொழி சிவா பேசுகையில், சேதமடைந்துள்ள கோயில் கடம்பனூர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அகர கடம்பனூர் ஆற்றங்கரை பாலத்தை சீரமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெற்றிவாய்க்கால் முடிகொண்டான் சாலைப் பணிகளை உடன் தொடங்க வே ண்டும் என்றார்

ஆணையர் ரேவதி பேசுகையில் இரட்டை மதகடி மயான கொள்ளாக்கு ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் இருந்து சாலை அமைக்கலாம் மேலும் ஏற்கெனவே ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பணிகளை 196 முடிக்காமல் உள்ளது. .ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஒப்பந்ததாரர்களிடம் உடனடியாக முடிப்பதற்கு அழுத்தம் தர வேண்டும், அப்போதுதான் புதிய பணிகளை கேட்டுப் பெற முடியும். என்றார்

ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் பேசுகையில் வரும் காலம் கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்னை ஏற்படாதவாறு ஆணையர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


Tags

Next Story