முழுகொள்ளவை எட்டும் நிலையில் கெலவரப்பள்ளி அணை
கெலவரப்பள்ளி அணை
தொடர் கனமழையால் ஒசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை முழு கொள்ளளவை எட்டி வருவதால் தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 600 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகள் ,கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.. ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் மதகுகள் கடந்த ஓராண்டாக சரிசெய்யப்பட்டு வந்து, ஒரு மாதமாக நீர் சேமிக்கப்பட்டு வந்தநிலையில் அணையில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணையின் முழுகொள்ளளவான 44.28 அடியில் 41.49 அடி நீர் நிரம்பி உள்ளநிலையில் அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.. அணைக்கு விநாடிக்கு 892 கனஅடிநீர் வரத்தாக உள்ளநிலையில், தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 600 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருவதால் தென்பெண்ணை ஆற்றில் நீர் ஆர்பரித்து செல்கிறது.
Next Story