கேந்திரிய வித்யாலயா பள்ளி, விளையாட்டு விழா:ஆட்சியர் பங்கேற்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளி, விளையாட்டு விழா:ஆட்சியர் பங்கேற்பு

போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விளையாட்டு தின விழாவில் போட்டிகளை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் விளையாட்டு தின விழாவில் பள்ளி தலைவரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கற்பகம், மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது, கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது.

மாணவ, மாணவிகள் அனைவரும் இன்றைய தினம் நடத்தப்படுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் அதேபோன்று விளையாட்டுகளில் மட்டும் அல்லாமல் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் கல்வி மிக இன்றியமையாதது கல்வியை சிறந்த முறையில் கற்றுக் கொண்டால் இவ்வுலகில் நமக்கு ஏற்படக்கூடிய சோதனைகள் அனைத்தையும் சந்தித்து, அவற்றை எளிதில் எதிர்கொண்டு சாதித்து வெற்றி பெறலாம்.

என் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் சொல்வதை கேட்டு செயல்பட்டதால் தான் நான் இன்று உங்கள் முன் மாவட்ட ஆட்சித் தலைவராக நிற்கின்றேன். உங்களுக்கு இந்த வயதில் சுயமாக முடிவெடுக்கும் தன்மை இருக்காது ஆகையால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்து கொண்டால் பிறகு உங்கள் வாழ்க்கையில் எதிர்காலத்தில் சிறந்த விளங்க உதவியாக இருக்கும் என்றும் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக வளம்வர மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கேந்திரிய வித்யாளயா பள்ளி முதல்வர் மேகநாதன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story