குடியாத்தத்தில் கெங்கையம்மன் திருவிழா தேரோட்டம்!

குடியாத்தத்தில் கெங்கையம்மன் திருவிழா தேரோட்டம்!

கவுதமபேட்டை பகுதியிலுள்ள கங்கை அம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.


கவுதமபேட்டை பகுதியிலுள்ள கங்கை அம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் கஸ்பா கவுதமபேட்டை கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், புதன்கிழமை பாலாபிஷேகமும் நடைபெற்றது. இந்நிலையில் காலை தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் வைக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ. அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகரமன்ற உறுப்பினர்கள் கற்பகம் மூர்த்தி, கவிதாபாபு, அரசு வழக்கறிஞர் எஸ்.பாண்டியன், தி.மு.க. நகர துணை செயலாளர்கள் என்.ஜம்புலிங்கம், வசந்தா ஆறுமுகம், என்.ஜி.நாகேந்திரன், பொன்ராஜேந்திரன், கே.கிருஷ்ணவேணி உள்பட நகர மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story