கெங்கையம்மன் கோவில் திருவிழா

கெங்கையம்மன் கோவில் திருவிழா

கெங்கையம்மன் கோவில் திருவிழா

ராணிப்பேட்டை ரத்தினகிரி அடுத்துள்ள பூட்டுத்தாக்கு கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடந்து முடிந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் கடந்த 7-ந்தேதி காப்புகட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் காலையில் அம்மனுக்கு அபிஷேகமும், மாலையில் காப்பு அலங்காரமும் நடைபெற்றது. திருவிழாவின் இறுதி நாளில் காலை வேளையில் சண்டாளச்சி உடலில் சிரசு பொருத்தி கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் கூழ்வார்த்தல், பொங்கலிடுதல்,கொக்கிலி கட்டை நடனம் ஆகியவை நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story