கெங்கவல்லி : பதற்றமான 11 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தம்

கெங்கவல்லி : பதற்றமான 11 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தம்

பைல் படம் 

கெங்கவல்லி தொகுதிக்குட்பட்ட 11 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கெங்கவல்லி: கள்ளக்குறிச்சி நடாளுமன்ற தொகு திக்கு உட்பட்ட கெங்கவல்லி சட்டமன்றதொகுதியில், 264 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.இதில் சிறுவாச்சூர், ஊனத்தூர், கிழக்கு ராஜாபாளையம், ஆனை யாம்பட்டி, கெங்கவல்லி, கடம்பூர், தம்மம்பட்டி செந் தாரப்பட்டி உள்ளிட்ட 11வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என அறியப்பட்டுள்ளன.இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் வெப் கேமராக்கள் பொருத்தி முழுவதுமாக கண்காணிக்க உள்ளனர். அதற்காக வாக்குச்சாவடி மையங்களில் வெப்கேமரா பொருத்தும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கூடுதலாக துணை ராணுவப்படை வீரர்கள், உள்ளூர் போலீசார் என பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story