மரத்திலிருந்து விழுந்த கேரள தொழிலாளி பலி

மரத்திலிருந்து விழுந்த கேரள தொழிலாளி பலி
X
பைல் படம்
பூதப்பாண்டிஅருகே கிராம்பு பறிக்கும் போது மரத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த கேரள மாநில தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (38). இவர் குமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்துள்ள பால்குளம் பகுதியில் உள்ள தனியார் கிராம்பு தோட்டத்தில் கிராம்பு பறிக்கும் தொழிலாளியாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு இவர் மரத்தில் ஏறி கிராம்பு பறிக்கும் போது, திடீரென தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக உடன் வேலை செய்த தொழிலாளர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று சுரேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story