குன்னத்தூரில் குற்றவாளிகளை கைது செய்த கேரளா போலீசார்

குன்னத்தூரில் குற்றவாளிகளை  கைது செய்த கேரளா போலீசார்

காவல் நிலையம்

குன்னத்தூரில் திருட்டு வழக்கில் கைதாகியுள்ள 2 குற்றவாளிகளை கேரளா போலிசார் நகை மற்றும் கார் திருட்டு வழக்கில் கைது செய்து கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.

திருப்பூர் குன்னத்தூர் அருகே வள்ளியரச்சல் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (47). ரிக் ஒர்ஷாப் உரிமையாளர். கோவிந்தசாமி வீட்டை பூட்டி விட்டு கடந்த 12-ம் தேதி வெளியூர் சென்றிருந்தார்.

இந்நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த ரூ. 12 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து குன்னத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.

இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த பாலக்காடு ஆலத்தூரை சேர்ந்த கலைமான்(60), தாமரைசேரி தச்சம்போயிலை சேர்ந்த முகமது நிஷார்(30) உள்ளிட்ட 3 பேரை கடந்த 18ஆம் தேதி தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுலைமான் மற்றும் முகமது நிசார் ஆகியோர் மீது கேரள மாநிலத்தில் கார் திருட்டு, சங்கிலி பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்தன.

திருப்பூர் மாவட்டத்தில் போலீஸார் கைது செய்ததை அறிந்த கேரள மாநிலம் பாலக்காடு போலீசார் நேற்று திருப்பூர் வந்து இருவரையும் கார் திருட்டு மற்றும் நகைப் பறிப்பு வழக்கில் கைது செய்து கேரளா அழைத்துச் சென்றனர். திருட்டு வழக்கில் தொடர்புடைய காரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

Tags

Next Story