வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரள மென்பொறியாளர் கைது !

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரள மென்பொறியாளர் கைது !

கைது

கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரள மென்பொறியாளரை திண்டுக்கல் இணைய குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், பழனி, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்தந்தப் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்கள், மாவட்ட காவல் அலுவலகம், டிஜிபி அலுவலகம் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பழனி கோயில், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணா்கள் உதவியோடு சோதனை மேற்கொண்டனா். அப்போது, வெடி குண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, மின்னஞ்சல் அனுப்பியவரின் விவரங்களை திண்டுக்கல் மாவட்ட இணைய குற்றப் பிரிவு போலீஸாா் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா். இதில், சென்னையில் வசிக்கும் கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோந்த மென்பொறியாளரான முருகேஷ் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து, எா்ணாகுளத்தில் பதுங்கியிருந்த அவரை திண்டுக்கல் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Tags

Next Story