நாகர்கோவிலில் கேரள வாலிபர் பலி

நாகர்கோவிலில் கேரள  வாலிபர் பலி
உயிரிழந்த அலக்ஸ் ராஜ்
நாகர்கோவில் சுப்பையார் குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் சுப்பையார் அமைந்துள்ளது. மிகவும் பாழடைந்து அசுத்தமாக காணப்பட்ட இந்த குளம் தற்போது தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த குளத்தில் மழை பெய்து தண்ணீர் நிரம்பி உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு குளத்தின் படி துறையில் 36 வயது மதிக்கத்தக்க கேரள வாலிபர் வருவார் மது போதையுடன் படுத்து கிடந்துள்ளார். இன்று காலை அவர் படுத்திருந்த இடத்தில் அவரது செல்போன் மற்றும் உடமைகள் மட்டும் இருந்தன. இதனை அங்கு குளிக்க சென்ற மக்கள் பார்த்து சந்தேகம் அடைந்து உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதை தொடர்ந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லைஃப் ஜாக்கெட் உதவியுடன் குளத்தில் குதித்து வாலிபரை தேடினர்.

அப்போது வாலிபர் குளிப்பதற்காக குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி பலியானது தெரிய வந்தது. தொடர்ந்து அவரது உடலை மீட்டனர். வாலிபர் படுத்திருந்த இடத்தில் அவரது ஓட்டுனர் உரிமம் இருந்தது.

அதன் மூலம் உயிரிழந்தவர் கேரள மாநிலம் செம்பூர் பகுதி ஒற்றசேகரமங்கலம் என்ற இடத்தில் உள்ள புத்தன் வீடு பகுதியை சேர்ந்த அலக்ஸ் ராஜ் என்பது தெரிய வந்தது. வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story