கேலோ இந்தியா - விழிப்புணர்வு மாரத்தான்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் நடந்த மாரத்தான் போட்டியை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.
2023 ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாநகரங்களில் நடத்தப்படவுள்ளது. இந்த போட்டியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார விழிப்புணர்வு வாகனமும் இயக்கப்படுகிறது. இந்த வாகனம் புதுக்கோட்டைக்கு வந்த நிலையில், புதுகை மாவட்ட விளையாட்டரங்கில் இருந்து மாரத்தான் ஓட்டம் நடந்தது. ஓட்டத்தை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எஸ்பி வந்திதா பாண்டே, எம்எல்ஏ முத்துராஜா, நகராட்சி தலைவர் திலகவதி, துணைத்தலைவர் லியாகத்அலி, ஆணையர் ஷியாமளா, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், தாசில்தார் கவியரசன் மற்றும் அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story