கேலோ-இந்தியா விழிப்புணர்வு வாகன பேரணி

கேலோ-இந்தியா விளையாட்டு தீபசுடரை வழங்கி விழிப்புணர்வு வாகனம் பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் நடைபெற உள்ள நாட்டின் பெருமைமிக்க விளையாட்டு நிகழ்வான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்-2023 முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே விழிப்புணர்வை ஏற்படும் விதமாக தீபசுடரையும்,கேலோ இந்தியா விளையாட்டு குறித்த தகவல் அடங்கிய விழிப்புணர்வு வாகனத்தையும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த வாகனத்தின் முன்னால் விருதுநகர் மாவட்ட காவல்துறையினரின் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.இந்த பேரணியானது விருதுநகர் எம்.ஜி.ஆர் சிலை,மேலரதவீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர்,கடந்த 6 ஆண்டுகளாக சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் புகழ்பெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை 13 நாட்கள் நடத்தப்படவுள்ளது என்றும் இது நாட்டின் அனைத்து விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் திறமைகளை வளர்ப்பதற்கும். அவர்களின் விளையாட்டுப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கும் ஒரு தளமாக அமையும் என்றார்.நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்.

Tags

Next Story