கேலோ- இந்தியா : கூடைப்பந்து போட்டியில் தமிழக மகளிர் அணி வெற்றி

கேலோ- இந்தியா : கூடைப்பந்து போட்டியில் தமிழக மகளிர் அணி வெற்றி
கூடை பந்து 
கேலோ - இந்தியா மகளிர் கூடைப்பந்து போட்டியில் 72-67 புள்ளிகள் கணக்கில் மஹாராஷ்டிர அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றி பெற்றது.
கோவை:6வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழகத்தில் சென்னை,கோவை, மதுரை,திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.இப்போட்டிகளில் உத்திரபிரதேசம், ராஜஸ்தான்,பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா,மிசோரம், சண்டிகார், மகாராஷ்டிரா,கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழக மகளிர் அணி மற்றும் மகாராஷ்டிரா மகளிர் அணி மோதின.நான்கு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழக அணி 72 புள்ளிகளும் மகாராஷ்டிரா அணி 67 புள்ளிகள் பெற்றது.ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழக மகளிர் கூடைப்பந்த அணியிடம் மஹாராஷ்டிரா அணி தோல்வியை தழுவியது.

Tags

Next Story