கேலோ - இந்தியாவில் பதக்கம் : எம்.எல்.ஏ வாழ்த்து
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய எம் எல் ஏ
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய எம் எல் ஏ
கேலோ - இந்தியா சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெட்ரா தமிழக பெண்கள் அணியினருக்கு பதக்கங்களை வழங்கி எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் பாராட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், மேலகோட்டையூர் அமைந்துள்ள தமிழ்நாடு உடற் கல்வியியல் விளையாட்டு பல்கலை கழகம் மைக்தானத்தில் கேலோ இந்தியா விளையாட்டில் சைக்கிளிங் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் பிரிவில் குழுவாக 4 பேர் தங்கப்பதக்கம் வென்றார்கள். தனிநபர் போட்டியில் ஸ்ரீமதி முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளார், மூன்றாவது இடத்தை பிடித்த தமிழரசி வெள்ளி பதக்கம் பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் வழங்கி வாழ்த்தினார்.. நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ப.ராகுல்நாத் ,உதவி ஆட்சியர் பயிற்சி ஆனந்த் குமார் சிங் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
Next Story


