காஞ்சியில் நுங்கு சீசன் துவக்கம்

காஞ்சியில் நுங்கு சீசன் துவக்கம்

களைகட்டிய நுங்கு சீசன்

நுங்கு சீசன் துவங்கியுள்ளதையொட்டி, சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில், 20 ரூபாய்க்கு ஐந்து நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோடைக்காலம் துவங்கி உள்ளதையொட்டி, உடல் சூட்டை தணிக்கும் வகையில், தர்ப்பூசணி, கிர்ணி, வெள்ளிக்காய் உள்ளிட்டவை காஞ்சி வீதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நுங்கு சீசன் துவங்கியுள்ளதையொட்டி, சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில், 20 ரூபாய்க்கு ஐந்து நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.

அய்யன்பேட்டையைச் சேர்ந்த நுங்கு வியாபாரி ராமச்சந்திரன் கூறியதாவது: காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பனை விவசாயிகளிடம் இருந்து நுங்கு வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.

கடந்த ஆண்டு பருவமழைக்கு போதுமான அளவு பருவமழை பெய்யாததால் நுங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விலையை ஏற்றாமல், கடந்த ஆண்டைபோல, ஐந்து நுங்கு 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்."

Tags

Next Story