தொளசம்பட்டியில் மதுவாங்கி கொடுக்க மறுத்தவர்களுக்கு அடிஉதை, வாலிபர் மீது வழக்கு.
தொளசம்பட்டி காவல்நிலையம்
ஓமலூர் அருகே மது வாங்கி கொடுக்க சொல்லி ஜேசிபி ஆபரேட்டர் தலையில் பீர் பாட்டிலால் வாலிபர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்த அடைக்கன் என்பவருடைய மகன் பழனிச்சாமி ஜேசிபி ஆபரேட்டரான இவர் கடந்த 23ஆம் தேதி அன்று மாலை தொளசம்பட்டி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு மது குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அதே பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்த தொளசம்பட்டி ஊராட்சி பனங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருடைய மகன் வெடிமுத்து என்கிற வெங்கடேஷ் தனக்கு மது வாங்கி கொடுக்க வேண்டுமென பழனிச்சாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு பழனிச்சாமி மது வாங்கி கொடுக்க என்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த வெடிமுத்து அருகில் இருந்த பீர் பாட்டிலால் பழனிச்சாமியின் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமியை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஓமலூர் அரசு மருத்துவமனையில் பழனிச்சாமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் வெடிமுத்து என்கிற வெங்கடேஷ் மீது தொளசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story