திருவல்லிக்கேணியில் கடத்திச் செல்லப்பட்ட இடை தரகர் விடுவிப்பு

திருவல்லிக்கேணியில் கடத்திச் செல்லப்பட்ட இடை தரகர் விடுவிப்பு

பைல் படம் 

திருவல்லிக்கேணியில் வியாபாரிகளால் கடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்ட இடை தரகர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவல்லிக்கேணியை சேர்ந்த சாகுல் ஹமீது பர்மா பஜாரில் வியாபாரிகளுக்கு பொருட்கள் வாங்கிக் கொடுக்கும் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறார். இவர் வியாபாரிகளிடம் அறிமுகம் செய்து வைத்த ஒருவர் பணத்தை சுருட்டி கொண்டு ஓடி விட்டார். இவரை வியாபாரிகள் தரப்பினர் கடத்தியதாக திருவல்லிக்கேணி போலீஸில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை இவர் விடுவிக்கப்பட்டார். இவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story