ஜோலார்பேட்டை அருகே 2 லட்சம் கடனுக்காக பெண் கடத்தல்: போலீசார் விசாரணை
செய்தியாளர்களை சந்தித்த உறவினர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் மார்த்தாண்டம் இவர் கட்டிட சென்டரிங் பணி செய்து வருகிறார். இவரது மனைவி புவனா(26). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
புவனா கடந்த 25-ம் தேதி காவேரிப்பட்டணத்திலிருந்து தனது தாய் வீடான ஜோலார்பேட்டை இடையம்பட்டிக்கு வந்துள்ளார். நாட்றம்பள்ளியில் பேருந்தில் இருந்து இறங்கி ஆட்டோவிற்காக காத்திருந்தபோது காக்கங்கரை பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் காரில் வீட்டில் விடுவதாக கூறி காரில் ஏற்றினார் ஜோலார்பேட்டைக்கு செல்லாமல் திருப்பத்தூர் வீட்டுவசதி வாரியம் பகுதிக்கு தனது வீட்டிற்கு அழைத்து சென்று அறையில் வைத்து பூட்டி வைத்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. பெண் மாயம் ஆனதாக உறவினர்கள் தேடியபோது புவனா கைபேசியில் இருந்து மெசேஜ் வந்தது.
அதன் பிறகு தான் அனைவருக்கும் தெரியவந்தது. அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கடத்தி சித்ரவதை செய்த கதிர்வேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். விசாரணையில் 2 லட்சம் பணம் வாங்கி கடனுக்கு தற்போது 15 லட்சம் தரவேண்டும் என கோரி தான் தற்போது கடத்தியதாக கூறப்படுகிறது.
பணத்திற்காக பெண்ணை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பேட்டி : புவனா, பாதிக்கப்பட்ட பெண்