ஆரணியை சேர்ந்த இளம்பெண் கடத்தல்!

ஆரணியை சேர்ந்த இளம்பெண் கடத்தல்!

ஆரணியை சேர்ந்த இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணியை சேர்ந்த இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா கொசப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண், பிளஸ்-2 முடித்துள்ளார். கடந்த 12-ந் தேதி இளம்பெண் குடும்பத்தினருடன் வேலூரை அடுத்த ஈச்சங்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்போது திடீரென அவரை காணவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதையடுத்து இளம்பெண்ணின் தாய் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில் எனது மகளுடன் சமூகவலைத்தளத்தில் பழகிய கோவையை சேர்ந்த வாலிபர் ஆசைவார்த்தை கூறி அவளை கடத்தி சென்றுவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மகளை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான இளம்பெண்ணையும், அவரை கடத்தியதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story