காண்ட்ராக்டர் கடத்தல் - கர்நாடகா போலீசார் மீது வழக்குப்பதிவு

காண்ட்ராக்டர் கடத்தல் - கர்நாடகா போலீசார் மீது வழக்குப்பதிவு

பைல் படம் 

கிளிஞ்சாடா பகுதியில் காண்ட்ராக்டரை காரில் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை தூதுர்மட்டம் கெரடாலீஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). அதே பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன். இவர்கள் இருவரும் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் அரசு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கிழிஞ்சாடா தனியார் எரிவாயு கம்பெனி முன் தனது வாகனத்தில் இருந்த ராஜ்குமாரை, இரண்டு இன்னோவா காரில் வந்த 10 பேர் திடீரென மறித்து தங்களது காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் ராஜ்குமாரின் நண்பரான கிருபாகரனுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து கிருபாகரன் கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸார், விசாரணை நடத்தினர். இதில் மற்றொரு வழக்கு சம்பந்தமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வந்த போலீஸார் ராஜ்குமாரை பிடித்து காரில் ஏற்றி கொண்டு சென்றது தெரியவந்தது.

ஆனாலும் சம்பவம் நடக்கும் பகுதியை சேர்ந்த காவல் நிலையம் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துதான் வழக்குக்காக அழைத்துச் செல்ல வேண்டும், அந்த நடைமுறையை பின்பற்றாததால் பெங்களூரு போலீஸார் மீது கொலக்கம்பை காவல் நிலையத்தில் வாகனத்தை மறித்து கடத்துதல், உள்பட இரண்டு பிரிவுகளை வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக போலீஸார் மீது நீலகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story